இதுக்கெல்லாமா பெண்களுக்கு தடை விதிப்பீங்க! கேள்வி கேட்கவைத்த தலிபான் அரசு!
Taliban government banned women visiting parks
தலிபான் அரசு பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியதால் அங்குள்ள பெண்களின் சுதந்திரம் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது.
உயர்நிலைக் கல்வி பெறுவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தலிபான் அரசு பெண்கள் பூங்காக்களுக்குச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு ஆட்சிக்கு வந்ததால் பெண்களின் சுதந்திரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை எதிர்த்து மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் பெண்களின் சுதந்திரத்தை முழுமையாக பறிக்கும் விதமாக தலிபான் அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
பூங்காவுக்கு பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து தலிபான் அரசின் அமைச்சர் தெரிவித்திருப்பதாவது, ''பூங்காவுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் அதற்கான விதிமுறைகள் தற்போது தயாராகி வருகிறது. அது வரை பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
English Summary
Taliban government banned women visiting parks