உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழக இளைஞர் மனமாற்றம்..நாடு திரும்ப கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தை சேர்ந்த இளைஞர் திடீரென மனமாற்றம் ஏற்பட்டு நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான போர் தொடர்ந்து 18 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் இராணுவத்தில் சேர பலரும் முன்வந்தனர். இந்தநிலையில் கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் தற்போது இராணுவத்தில் சேர்ந்த தமிழக இளைஞர் சாய் நிகேஷ் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனது மகனை பத்திரமாக மீட்டு தரவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu youth requesting repatriation from Ukrainian army


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->