உ.பி : தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற போலி சான்றிதழ் அளித்த ஆசிரியை - அதிரடி உத்தரவிட்ட கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற போலி சான்றிதழ் அளித்த ஆசிரியை - அதிரடி உத்தரவிட்ட கல்வித்துறை.!

தேர்தல் பணியில் இருந்து விலக்குப் பெறுவதற்காக ஆசிரியை ஒருவர் போலி கொரோனா சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிலிப்பிட் மாவட்டத்தில் புரான்பூர் பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ரித்து தோமர். இவருக்கு இன்று நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில், வாக்குச்சாவடி அதிகாரியாக பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், ரித்து தோமர் அதில் இருந்து விலக்கு பெற விரும்பி, அதற்காக ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவுடன், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி, மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த சான்றிதழை பரிசோதனை செய்தனர். அதில், ரித்து தோமர் வேறு ஒருவரின் கொரோனாத் தொற்று சான்றிதழை திருத்தி தாக்கல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, மாநிலக் கல்வித்துறை ரித்து தோமர் மீது போலீசில் புகார் அளிக்குமாறு அடிப்படை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியை ஒருவர் தேர்தல் பணியில் இருந்து விளக்கு பெற போலி சான்றிதழ் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher submit fake certificate for election duty in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->