நடுவானில் விமானக் கதவைத் திறந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தணடனை.!!
ten years jail penalty to young man for open door at midair
நடுவானில் விமானக் கதவைத் திறந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தணடனை.!!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென் கொரியா நாட்டில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 194 விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் இருநூறு பேர் பயணம் மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்த விமானம் டெங்கு விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது அந்த விமானத்தின் கதவு திடீரென திறந்தது. இதனால் விமானத்தில் இருந்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானம் தரை இறங்கியவுடன் பயணிகள் அனைவரும் கீழே இரக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே போலீசார் விமானத்தின் கதவை திறந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த வாலிபர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக தெரிவித்தார்.
இருப்பினும், அந்த வாலிபருக்கு விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
ten years jail penalty to young man for open door at midair