ஜாம்பியாவில் பயங்கர விபத்து....சுரங்கத்தில் சிக்கி  8 தொழிலாளர்கள் பலி! - Seithipunal
Seithipunal


ஜாம்பியாவில் உள்ள  லுசாகா மாகாணத்தில், சாங்வே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கட்டிட பணிகளுக்கு தேவையான கற்களை எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த  நிலையில், பணியை முடித்தபோது, திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இது குறித்து  காவல் துறையின் செய்தி தொடர்பாளர் ரே ஹமூங்கா கூறுகையில், சுரங்கம் இடிந்து விழுந்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

இதில், ஓட்டுநர் ஒருவர் பகுதியளவு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார். அப்போது நிறைய பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என்றும், அவர்களை மீட்கும்படியும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், மீட்பு குழுவினர் 8 பேரின் உடல்களை மீட்ட நிலையில், மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதி சவாலான பகுதி என்பதால், விட்டு விட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible accident in Zambia 8 workers trapped in mine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->