ரம்ஜான் காலத்தில் சிரியாவில் பயங்கரவாத தாக்குதல்; எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..!
Terrorist attack in Syria during Ramadan America has issued a warning
ரம்ஜான் விடுமுறை காலத்தில் தீவிரவாதிகள் சிரியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினர் உடனடியாக சிரியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு கோயாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 06 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சிரியாவில் ரம்ஜான் பண்டிகை விடுமுறை சமயத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள், பொது நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், வெளிநாட்டினர் யாரும் இந்த சமயம், சிரியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், பயங்கரவாதம், உள்நாட்டு அமைதியின்மை, கடத்தல், பணயக்கைதிகள் பிடிப்பு, ஆயுத மோதல்கள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
அத்துடன், சிரியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால், 0969-333644, +963-969-333644 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Terrorist attack in Syria during Ramadan America has issued a warning