உக்ரைன் போர் முடிவுக்கு இந்தியாவின் G20 தலைமை ஒரு வழியை கண்டுபிடிக்கும் - ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை - Seithipunal
Seithipunal


1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. 

தற்பொழுது ஒரு வருடம் நிறைவடைவதற்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் ரஷ்யா படைகள் தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த முனிச் மாநாட்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போரில் உக்ரைனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் உக்கரனுக்கு ஆதி நவீன ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் யூகோ ஆஸ்டுடோ செய்தியாளர்களிடம், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்திடம் இருந்து பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கும் ஒரு லட்சிய திட்டத்தை இந்தியா முன்வைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு முற்றிலும் நியாயமற்றது, இது ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஒரு நேர்மறையான முடிவை நோக்கி நடவடிக்கைகளை வழிநடத்த இந்திய ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும், உக்ரைனை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஆதரிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The European Union hopes that India G20 leadership will find a way to end the war in Ukraine


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->