தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்!...இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உறுதி! - Seithipunal
Seithipunal


இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றார். தொடர்ந்து இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே செப்டம்பர்  23-ம் தேதி   பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற  பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று அனுரா குமார திசநாயகே  பேசினார். அப்போது,  அதிக தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிக்கு சொந்தமான நீர்வளங்களை தமிழக மீனவர்கள் அழிப்பதாகவும், இலங்கை  அரசாங்கம், நீர்வளங்களை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் என்றும், அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று கூறினார்.

மேலும், ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருகின்றனர் என்றும்,  இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The lands of the tamils ​​will be returned to them sri lankan president anura kumara dissanayake assured


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->