நடிகை தரனே அலிதூஸ்டியை விடுதலை செய்தது ஈரான் அரசு.!
The of Iran govt released the actor Tarane Alidoosty
ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்து தாக்கியதில் மாஷா உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் தங்களது தலைமுடியை வெட்டியும் ஹிஜாப்களை எரித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஹிஜாப் எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 495 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விரிக்கப்பட்டு, அவர்களுக்கு பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஈரானை சேர்ந்த ஆஸ்கார் விருது பெற்ற, புகழ்பெற்ற நடிகை தாரனே அலிதூஸ்டி போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, ஈரானின் மரண தண்டனைக்கு எதிராக பேசும்படி, சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக நடிகை தாரனே அலிதூஸ்டி மீது குற்றம் சாட்டி, அவரை ஈரான் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தரானே அலிதூஸ்தி ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தரானே அலிதூஸ்தி 18 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த தரானே அலிதூஸ்திக்கு அவரது நண்பர்கள் பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
English Summary
The of Iran govt released the actor Tarane Alidoosty