அமேசான் காட்டிற்குள் விழுந்து நொறுங்கிய விமானம்.! 17 நாட்களுக்குப் பிறகு 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு..! - Seithipunal
Seithipunal


கொலம்பியாயாவில் அமேசான் வனப்பகுதியில் இருந்து சான் ஜோஸ் டெல் குவேவியர் பகுதிக்கு தம்பதி ஒருவர் தனது நான்கு குழந்தைகளுடன் கடந்த மே 1ம் தேதி விமானத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, கொலம்பிய பகுதியில் உள்ள அமேசான் வனப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக 11 மாத குழந்தை, நான்கு, ஒன்பது மற்றும் பதின்மூன்று வயது குழந்தைகள் காட்டுக்குள் உயிருடன் சிக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, இந்த விமான விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மோப்ப நாய்களுடன் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை, 3 சிறுவர்கள் இன்று உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து டுவிட்டரில் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, "நாட்டிற்கு மகிழ்ச்சி" இராணுவத்தின் கடினமான தேடல் முயற்சிகளுக்கு பிறகு குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

 

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The plane crashed into the Amazon forest for 4 children including one year old rescued after 17 days in Colombia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->