தொடரும் சிக்கல்!!! சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது தாமதமாகுமா? நாசா கூறுவது என்ன?
The problem continues Will Sunita Williams return to Earth be delayed What does NASA say
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலிருந்து 'ஃபால்கன் 9 ராக்கெட்' விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் இந்த ராக்கெட் தான் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவரவுள்ளது. இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இன்றைய திட்டம் தாமதமாகியுள்ளது.

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்:
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக "ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 " திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணியளவில் ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்புள்ளதாக 'நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்' சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நாசா விண்வெளி வீரர்களான நிகோல் ஏயர்ஸ்,ஆனி மெக்லைன், ஜப்பான் விண்வெளி துறையை சேர்ந்த ரோஸ்கோமோஸ் விண்வெளி மற்றும் தகுயா ஒனிஷி வீரர் ,கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறிவிட்டனர். மேலும், இந்த ராக்கெட்டும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்றைய திட்டப்படி ஸ்பேக்ஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளிக்கு புறப்பட்டு இருந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19-ம் தேதி பூமிக்கு திரும்பியிருப்பர். தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இருவரும் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகியுள்ளது.
English Summary
The problem continues Will Sunita Williams return to Earth be delayed What does NASA say