மாலில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த பொதுமக்கள்!
The public entered the mall by breaking the glass
பாகிஸ்தான் மால் ஒன்றில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த பொது மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் மால் திறக்கப்பட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ட்ரீம் பஜார் என்று அழைக்கப்படும் மால் திறப்புக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்திய மதிப்பில் ஆரம்ப சலுகையாக ரூ.15 க்கும் குறைவாக பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில் மால் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மால் ஊழியர்கள் கதவை அடைத்தனர்.
ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், மக்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி விட்டு அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
மேலும், மதியம் 3 மணிக்கு மால் திறக்கப்பட்ட நிலையில் 3.30 மணிக்குள் மால் முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
The public entered the mall by breaking the glass