தென் கொரிய அதிபர் பதவி நீக்கம்..? ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் குரல்..! - Seithipunal
Seithipunal


தென்கொரிய அதிபர் பதவி நீக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் திருப்தி இல்லை என அந்நாட்டு மக்கள் கொந்தளித்துள்ளனர்.

தென்கொரிய அதிபர் யூன், சமீபத்தில் பேசிருந்த கருத்துக்கள் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. 

இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், அவரை அதிபர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இருப்பினும் தென்கொரிய நாட்டின் சட்டத்தின்படி, அதிபரை பதவி நீக்கும் இறுதி முடிவை அரசியலமைப்பு நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும். 

இந்த நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு தற்காலிக அதிபராக உள்ள 'ஹான் டக் சூ' வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனால் அவர்  நீதிபதிகளை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.இதனால் அதிருப்தி அடைந்த  நாடாளுமன்றம் அவருக்க எதிராக தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்டால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும். தற்போது 192 ஆதரவு ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

குறித்த, எல்லா பிரச்சினைகளுக்கும் தொடக்கம் ராணுவ சட்டம் எனும் அறிவிப்புதான் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.


அதாவது, அதிபர் யூன், சில நாட்களுக்கு முன்னர் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார். இதற்கு காரணமாக வடகொரியாவை குறிப்பிட்டிருந்தார். வடகொரிய ஆதரவாளர்கள், தென்கொரிய அரசுக்கு எதிராக தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த செயல்பாடுகள் தற்போது தீவிரமடைந்திருப்பதால் வேறு வழியில்லாமல் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

குறித்த ராணுவ சட்டத்தின் படி, நெருக்கடி காலங்களில் மட்டுமே ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால், தென்கொரியாவில் பல முறை இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்த சட்டமானது பொதுமக்களின் உரிமைகளில் தலையீடு செய்கிறது. ஒன்று கூடுதல், பேசுதல், கருத்து தெரிவித்தல், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை இந்த சட்டம் முடக்குகிறது. இது தவிர, ஊரடங்கு போன்ற உத்தரவுகளும் ராணுவ சட்டத்தின் மூலம் பிறப்பிக்கப்படும். மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை, ராணுவ நீதிமன்றமே கையில் எடுத்து விசாரிக்கும்.

இவை அனைத்துமே ஜனநாயக நாட்டில் சர்வாதிகார செயல்பாடுகள் என்பதல் தென்கொரிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பையடுத்து அதிபர் தனது அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அதாங்க் அவர் பொதுவெளியிலும் மன்னிப்பும் கோரியிருந்தார். ஆனால், அவர் மீதான எதிர்ப்பை, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டன. 

தற்போது அதிபர் யூன் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. வழக்கமாக வடகொரியாவில் இருந்து வரும் தகவல்கள்தான் பெரிய அளவில் பூதாகரமாக பேசப்படும். 

ஆனால், இப்போது தென்கொரியாவில் பெரிய அளவில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுகிறது என்பது முதன் முறையாக உலக நாடுகளில் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

சர்வதேச அரசியலை பொறுத்தவரை தென்கொரியா அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சார்ந்து இருக்கிறது. வடகொரியா, சீனா, ரஷ்யா பக்கம் நிற்கிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா 11,000 வீரர்களை அனுப்பி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The removal of the South Korean president


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->