இஸ்ரேல் கூறும் அதிர்ச்சி சம்பவம்!..ஹிஸ்புல்லா போராளிகள் 70 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தரை மற்றும் வான்வழி தாக்குதல்களில் 70 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாக   இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல்,  ராக்கெட்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை இஸ்ரேலிய வீரர்கள் அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The shocking incident that srael says the tragedy of the death of 70 hezbollah fighters


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->