ரஷ்யாவை தாக்க துடிக்கும் அமரிக்கா?...உக்ரைனுக்கு 275 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அமேரிக்காவில் புதிய அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா,  உக்ரைன் மீது போர் தொடுத்தது.  உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது.

இரண்டு அரை ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதற்கிடையே, ரஷியா மீது தொலைதூரம் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி அளித்துள்ளார். இதன் காரணமாக அணு ஆயுத பயன்பாடு தொடர்பான கொள்கைகளை ரஷியா மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  275 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதன் படி, ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்களும் இதில் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The united states is eager to attack russia ukraine announced 275 million dollars in military aid


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->