அமெரிக்க அரசு எடுத்த திடீர் முடிவு..உலக நாடுகள் அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


 உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.மேலும்  இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான மனிதாபிமான உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளைத் தவிர அனைத்து வெளிநாட்டு  புதிய நிதியை அமெரிக்க முடக்கியுள்ளது.

 குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் குடியுரிமை, அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட  பல்வேறு  முக்கிய விவகாரங்கள் தொடர்பானஅதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில், உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் , இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கான மனிதாபிமான உணவுத் திட்டங்கள் மற்றும் ராணுவ உதவிகளைத் தவிர அனைத்து உதவிகளுக்கான புதிய நிதியை அமெரிக்க வெளியுறவுத்துறை முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவின் இந்த உத்தரவால் உலக அளவில் சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் பிற வெளிநாட்டு உதவி திட்டங்களுக்கு  வழங்கப்பட்டு வரும் நிதியானது உடனடியாக நிறுத்தப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.


மேலும் அமெரிக்க அரசின் இந்த முடிவு, அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உதவித் திட்டங்களை நீக்குவது தொடர்பான ஜனாதிபதி டிரம்ப்பின் உறுதிமொழியை அமல்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.மேலும் இது தொடர்பான சுற்றறிக்கை உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அதில், அமெரிக்க அரசின் உதவி திட்டங்களுக்கு தற்போது இருப்பில் இருக்கும் நிதியை தவிர புதிய நிதியை செலவு செய்ய தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  அமெரிக்க அரசு சார்பில் உலக அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான உதவி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் எவற்றைத் தொடரலாம் என்பது குறித்து அமெரிக்க  மறுஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The U.S. government's sudden decision The world is shocked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->