உலகை நடுங்க வைத்த ரஷ்ய தாக்குதல்!...ஒரே நாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொலை!..அதிர்ச்சியில் உலக நாடுகள்! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-ம் ஆண்டு நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா,  உக்ரைன் மீது போர் தொடுத்தது.  உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக புதின்  அறிவித்தார். தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், ரஷ்ய நாட்டில் உள்ள குர்ஷ்க் மாகாணத்தில் உக்ரைன் வீரர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை வெளியேற்ற ரஷ்யா பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில்  நேற்று  நடத்திய தாக்குதலில் ஒரேநாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The ussian attack shook the world150 ukrainian soldiers were killed in one day the world is in shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->