டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 230.! அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து இல்லை.! அடுத்த இலங்கை.?! - Seithipunal
Seithipunal


ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இதற்கு முன்னதாக 228.37 ஆக இருந்தது. ஆனால் இன்றைய நாள் வர்த்தகத்தின் போது 230 ஆக சரிந்ததுள்ளது.  செலுத்த வேண்டிய தொகைகளுக்கு  அதிகளவில் டாலர் வெளியேறுவதால், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில், அறுவை சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் மயக்க மருந்து போதிய அளவுக்கு இல்லாததால் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவிற்கு மயக்க மருந்து இல்லாதது சுகாதாரத் துறையின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது என்று ஊடகங்கள் விமர்சித்து வருகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதார செயலாளர் அலி ஜான் தெரிவித்துள்ளதாவது, 

"பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினை அரசின் விவகாரமாக்க வேண்டாம், அனைத்து மருத்துவ மையங்களும் சொந்த ஏற்பாட்டின் மூலம் மருந்துகளை வரவழைத்துக் கொள்ளலாம். 

ஒரு பக்கம் பண மதிப்பு வீழ்ச்சி, மருந்து தட்டுப்பாடு என ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையை நினைவுபடுத்தும் வகையில் பாகிஸ்தான் நிலைமையும் மாறி வருகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The value of Pakistani rupee to the dollar is 230 No anesthesia for surgery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->