இஸ்ரேல் - ஈரான் போர் இனி மேல் தான் ஆரம்பம்!....ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்க இஸ்ரேல் பக்கா பிளான்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லா  கொல்லப்பட்டார். மேலும் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது. உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்படி இஸ்ரேலில் உள்ள நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில், ஈஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்க ரானின் முக்கிய எண்ணெய் கிணறுகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் ஈரானின் அணு ஆயுத கூடம் மீது இஸ்ரேல் குறிவைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், இதன் காரணமாக இஸ்ரேல் - ஈரான் போர் மேலும் விரிவடைந்து தீவிரமடையும்  என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The war between Israel and Iran is about to begin israel has a plan to destabilize Iran economy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->