மீண்டும் வெடிக்கும் போர் : இஸ்ரேல் வான்வழி தாக்குதல்- காசாவில் 30 பேர் பலி! - Seithipunal
Seithipunal


அக்டோபர் 7ஆம் தேதி காசா முனையை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலின் எல்லையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் கைதிகளாக கடத்தப்பட்டு காசா முனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கு பதிலளிக்க இஸ்ரேல் கடுமையான போர்க் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களால் காசாவில் இதுவரை 43,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், இதில் பல பொது மக்கள் அடங்குவார்கள். 

மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதல்களில் கூடுதலாக 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழி தாக்குதல்களால் காசாவில் மேலும் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் ஹமாஸ் குழுவினரை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், அவர்களை நிர்மூலமாக்கும் முயற்சியாக இருக்கிறது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலைதற்போது காசா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சிக்கல்களை உருவாக்கி, பொதுமக்கள் தப்பிச் செல்ல முடியாத சூழலாக உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The war erupts again Israel air attack 30 people died in Gaza


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->