ட்ரம்பின் முதல் அமைச்சரவை சந்திப்பு; முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்த வெள்ளை மாளிகை..! - Seithipunal
Seithipunal


பிப்ரவரி 26  புதன்கிழமை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது முதல் அமைச்சரவை சந்திப்பை வெள்ளை மாளிகையில் நடத்தினார். இந்த சந்திப்பின் போது பிரபல செய்தி நிறுவனங்களான ராய்ட்டர்ஸ், ஏபி போன்ற சில முன்னணி செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிய வருகிறது.

மேலும், ஏபிசி, நியூஸ்மேக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஆக்சியோஸ், பிளேஸ், புளூம்பர்க் உள்ளிட்ட நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகை அமைச்சரவை சந்திப்பு நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிரம்ப் நிர்வாகம் ஊடகம் தொடர்பாகப் புதிய கொள்கையை பிப்ரவரி 25ஆம் தேதி அறிவித்தது. அதாவது, ஓவல் அலுவலகம் உள்ளிட்ட சிறிய இடங்களில் நடக்கும் சந்திப்புகளுக்கு எந்தெந்த ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவது என்பதை வெள்ளை மாளிகை முடிவு செய்யும் என்று அறிவித்து இருந்தது, அதனடிப்படையில், ஊடகங்களுக்கான புதிய கொள்கையின் தொடக்கமாக இந்த விடயம் பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க அதற்கென பிரத்யேகமான செய்தியாளர்கள் மன்றம் உள்ளது. அதில் இருக்கும் செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.அதில், ஏபி, ராய்ட்டர்ஸ், மற்றும் புளூம்பர்க் ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாக  இருக்கிறது.

ராய்ட்டர்ஸ் மற்றும் சில செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்  பல ஆண்டுகளாக வெள்ளை மாளிகைச் செய்திகளைக எழுதி வருகிறது. 

இந்நிலையில், முக்கிய ஊடக நிறுவனங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லியவிட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The White House did not allow major news organizations to attend Trumps first cabinet meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->