உலகின் மிக நீளமான கடலடி சுரங்கம் – நோர்வேயின் ரோக்ஃபாஸ்ட் மெகா திட்டம்! - Seithipunal
Seithipunal


நோர்வே நாட்டின் மேற்கு கடற்கரையில் போக்குவரத்தை முற்றிலும் மாற்றும் வகையில் உருவாகி வரும் அதிரடியான மெகா திட்டம் தான் ரோக்‌பாஸ்ட் சுரங்கப்பாதை (Rogfast Tunnel). இது உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான கடலடி சுரங்கப்பாதை எனும் பெருமையை பெற இருக்கிறது.

26.7 கிலோமீட்டர் நீளமும், 390 மீட்டர் ஆழமும் கொண்ட இந்தச் சுரங்கம், ரோகாலாந்து கவுண்டியில் உள்ள ராண்டபெர்க் மற்றும் போக்ன் நகராட்சிகளை இணைக்கிறது. இது, E39 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக அமைக்கப்படுகிறது.

பயண நேரத்தை மாற்றும் புரட்சியளிக்கும் திட்டம்!

தற்போது ஸ்டாவஞ்சர் மற்றும் பெர்கன் ஆகிய நோர்வேயின் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிக்க 11 மணி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் ரோக்‌பாஸ்ட் சுரங்கம் நிறைவடைந்தவுடன், அந்த பயண நேரம் வெறும் 40 நிமிடங்களாகவே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த திட்டம் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் பயண நேரத்தை பெரிதும் குறைக்கும்,” என திட்ட மேலாளர் ஒட்வார் கார்மோ தெரிவித்தார். ஸ்டாவஞ்சர் நான்காவது பெரிய நகரம், பெர்கன் இரண்டாவது பெரிய நகரம் என்பதால் இந்த திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

பாதுகாப்பும், தொழில்நுட்பமும்!

சுரங்கத்தில் ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் 260 மீட்டர் ஆழத்தில் க்விட்சோயின் கீழே இரண்டு வட்ட வடிவ சந்திப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இது பாதைகள் சந்திக்க உதவுகின்றன.

இரட்டைக் குழாய் அமைப்பு விபத்து ஏற்படும் நிலையில் ஒரு பாதையிலிருந்து மற்றொன்றுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. மேலும் துல்லியமான கேமரா கண்காணிப்பு அமைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செயல்படும்.

செலவும் நிதி திட்டமும்

இந்த மெகா திட்டம் 2033ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த செலவு சுமார் 36 பில்லியன் யூரோ ஆகும். இதற்கான நிதி, பொது நிதி மற்றும் சுங்க வரிகளிலிருந்து திரட்டப்படும்.

வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கு புதுஆரம்பம்!

இந்த சுரங்கம் மூலம் கடலுக்கு அடியில் பயணிக்க சிறந்த சாலைத்தடம் உருவாகும். மீன்வள தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் வேகமாகவும், படகுகளைப் பாவிக்காமலும் சந்தைகளை அடைய முடியும்.

ஜெர்மனி-டென்மார்க் இடையே உள்ள Fehmarn Belt போன்ற திட்டங்களில் கடலின் அடியில் செயல்படும் சுரங்கங்கள் கட்டப்படும். ஆனால், ரோக்‌பாஸ்ட் திட்டம் கடலுக்கு அடியில் உள்ள உறைந்த பாறைகளை நேராக துளைத்துச் செல்லும் விதமாக அமைக்கப்படுகிறது. இது நீரழுத்தத்தையும் நிலைத்தன்மையையும் நன்கு சமாளிக்கிறது.

"நாங்கள் சுமார் 40 கடலடி சுரங்கங்களை ஏற்கனவே கட்டியுள்ளோம். பாலங்களை விட கடலடியில் சுரங்கம் அமைப்பது எளிது" என திட்ட மேலாளர் கூறுகிறார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The world longest undersea tunnel Norway Rockfast mega project


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->