ஒரே ஒரு வெள்ளப்பெருக்கு தான்!...14 லட்சம் பேர் கடும் பாதிப்பு!...ஐ.நா அதிர்ச்சி தகவல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தெற்கு சூடான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு, தெற்கு சூடான் மற்றும் சூடானுக்கு உட்பட்ட அபை நிர்வாக பகுதிகளில்  14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்கு சூடான் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல பேரின் உயிர்களை காவு வாங்கியது. இந்த நிலையில், ஐ.நா. அமைப்பின் மனிதாபிமான விவகாரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு சூடான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு, தெற்கு சூடான் மற்றும் சூடானுக்கு உட்பட்ட அபை நிர்வாக பகுதி மற்றும் 43 நாடுகளை சேர்ந்த 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவற்றில், வடக்கு பாஹ்ர் எல் கஜல் மற்றும் ஜாங்லெய்  மாகாணங்கள்  51 சதவீதம் அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 22 நாடுகள் மற்றும் அபை பகுதியை சேர்ந்த 3.79 லட்சம் பேர் புலம்பெயர்ந்து உள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக அந்த பகுதிகளில், மலேரியா பாதிப்பு அதிகரித்து உள்ளது. குறிப்பாக, வெள்ளப் பெருக்கால் வீடுகள் சேதமடைந்து உள்ளது. கால்நடைகளும், பயிர்களும் பாதிப்படைந்து உள்ளன. பருவநிலை மாற்றம் விளைவாக தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மோசமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There is only one flood 14 lakh people are seriously affected un shocking information release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->