தண்ணீர் பாட்டிலுடன் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தண்ணீர் பாட்டிலுடன் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள்.! நடந்தது என்ன?

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹண்டி மாவட்டத்தை சேர்ந்த மூன்றுத் தொழிலாளர்கள் கடந்த இரண்டு  மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருக்குக்கு வேலை தேடி வந்தனர். 

இதையடுத்து அவர்கள் பெங்களூரில் ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை. சில நாட்கள் கழித்து அவர்கள் சம்பளம் கேட்ட போது முதலாளி மூன்று பேரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதனால், மூன்று பேரும் கையில் காசு இல்லாததால் தன் சொந்த ஊருக்கு நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்து, கடந்த மார்ச் 26ம் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்டுள்ளனர். இதையடுத்து தண்ணீரை மட்டுமே குடித்து நடந்து சென்ற இவர்கள் கடந்த 2ம் தேதி கோரபுட் என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கு பசியைத் தாங்க முடியாமல் ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவரிடம் தங்கள் சூழல் குறித்து தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட அவர் உணவும் சிறிது பணமும் கொடுத்துள்ளார். அதேபோல் அப்பகுதி மக்கள் சிலர் சிறிது பணம் கொடுத்து அவர்களை வாகனத்தில்  கலஹண்டிக்கு அனுப்பி வைத்தனர். 

ஐந்து நாட்கள் கழித்து வெளியான இந்த செய்திக் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலத் தொழிலார்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three north indians walking from banglore to odisa with water bottle only


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->