இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று; அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நிகழ்வுகள்..!
Today Sri Lanka 77th Independence Day
நமது அண்டை நாடான இலங்கையின் 77ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. 1948, பெப்ரவரி மாதம் 04-ஆம் தேதி, இலங்கையின் 132 ஆண்டு கால பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, சுதந்திரம் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு வருட சுதந்திர தினத்திற்கும் முப்படைகளின் வீரத்தை காட்டும் நாளாக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையானது பல் கலாசாரம் கொண்ட நாடு என்பதனால், ஒவ்வொரு கலாசாரத்தின் கலைகளும், சிறப்பியல்புகளையும் நடனம், பாடல், நாடகம் போன்ற வடிவில் வெளிப்படுத்துவார்கள்.
அந்தவகையில், இலங்கையின் 77ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வுகள், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், அந்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படவுள்ளது.
இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் பொதுமக்கள் அதிகமாக பங்கேற்கக் கூடிய கொண்டாட்டமாக இடம் பெறவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில், சுதந்திர தின நிகழ்வுகள் வெகுவிமரிசையாகவும் அதேவேளை, செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், 77ஆவது சுதந்திர தின நிகழ்வை குறைந்த செலவில் கொண்டாடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வருட நிகழ்வுக்கு ரூ. 107 மில்லியன் செலவிடப்படடுள்ளது. இந்த ஆண்டு முடிந்தவரை செலவுகளை குறைக்க ஆலோசனைகள் இடம்பெற்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
English Summary
Today Sri Lanka 77th Independence Day