மேடையில் பாடிக்கொண்டிருந்த போதே சரிந்து விழுந்து உயிரிழந்த பிரபல ராப் பாடகர்- சோகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே புகழ்பெற்ற ராப் பாடகர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த ராப் பாடகர் பிக் போக்கி.

 இவர் 17ம் தேதி அன்று இரவு அமெரிக்காவின் பியூமண்ட் நகரில் உள்ள பார் ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராப் பாடலை பாடிக் கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சில வினாடிகளில் அவர் சரிந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அங்கு அவசர உதவிகள், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 அதன்பிறகு பாடகர் பிக் போக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இவருக்கு வயது 48. பிக் போக்கியின் மரணம் குறித்த சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திதயுள்ளது.

பிக் போக்கியின் உண்மையான பெயர் மில்டன் பவல். இவர் இறுதியாக இறுதியாக 2021ஆம் ஆண்டு சென்செய் எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

top singer death issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->