பாகிஸ்தானில் நிகழ்ந்த சோகம் : நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே  கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு உள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் இன்று  திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வீட்டின் மேல் சரிந்தது. இந்த சம்பவத்தில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை அகற்றுவதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு  சில பகுதிகள் தற்போது பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் பல மாவட்டங்களில் நிலச்சரிவு போன்றவற்றை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிபாத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tragedy in Pakistan 12 members of the same family were killed in a landslide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->