நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிரம்பின் கொடூரம்!!! பாஸ்போர்ட்டில் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். மேலும் பல நல்ல திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில், இருப் பாலினத்தவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவார்கள் எனத் திடீர் முடிவு ஒன்றைத் தெரிவித்தார். அதன்படி அமெரிக்காவில் விளையாட்டுகளில் மற்றும் பாதுகாப்பு படைகளில் மாற்றுப் பாலினத்தவர்களுக்குத் தடை விதிக்கும் வகை உத்தரவில் கையெழுத்துள்ளார். அவருடைய இந்தத் திடீர் முடிவாய் பல இடங்களில் விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன.

மூன்றாம் பாலினத்தவர்:

 குறிப்பாகப் பாஸ்போர்ட் அலுவலகங்களில் Male அல்லது Female பெயர்களைக் கொண்ட பாஸ்போர்ட்களை மட்டுமே வழங்குகிறது. அதேநேரத்தில், மூன்றாம் பாலினத்தவரின் x விருப்பத்தை நீக்கி உள்ளது. இதில் HBOவின் Euphoria நிகழ்ச்சியில் நடித்துப் பிரபலமானவர் திருநங்கை 'அண்டர் ஷஃபார்'. இந்நிலையில்,வெளிநாட்டில் படப்பிடிப்பின் போது 'ஹண்டர்' தனது ஒரிஜினல் பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டதால் மாற்று பாஸ்போர்ட்டை நாடியுள்ளார். இதில் அவருக்குப் புதிதாக வழங்கப்பட்ட அமெரிக்கா பாஸ்போர்ட்டில் Male என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ,அவரது முந்தைய பாஸ்போர்ட்டில் அவர் Female என்று சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த ஹண்டர், தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அண்டர் ஷஃபார் திருநங்கை:

அதில்," புதிதாக வழங்கப்பட்ட அமெரிக்கப் பாஸ்போர்ட்டில் தன்னை Male என்று தவறாக அடையாளம் காட்டியுள்ளனர். விண்ணப்பச் செயல்பாட்டின் போது என்னை Female என அடையாளம் காட்டப்பட்டது. இப்படி உண்மையில் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. என் பாஸ்போர்ட்டில் 'M' என்ற எழுத்தை வைப்பதுக்கு நான் கண்டிக்கவில்லை. ஆனால் இதன் மூலம் என் பாலினத்தில் எந்தப் பிரச்சனையும் வரப்போவதில்லை. ஆம், நான் திருநங்கை இல்லை என்பதில் உண்மையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஆனால், அது என் வாழ்க்கையைக் கொஞ்சம் கடினமான பிரச்சனைகளை விளைவிக்கும். என் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் துயரங்களை அளிக்கும்" எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trumps cruelty increasing day by day Transgender woman changed to male in passport


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->