துருக்கி நிலநடுக்கம்.. கட்டுமான பணியில் ஊழல்.. 184 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. 

இந்த நிலநடுக்கத்தால் சுமார் இதுவரை 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டிடங்களை உறுதியாக கட்டவில்லை என கட்டுமான நிறுவன அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து துருக்கி அரசு விசாரணை செய்ததில் கட்டுமான அதிகாரிகள் முறைகேடு செய்து கட்டிடங்களை கட்டியது தெரிய வந்தது.

இந்த நிலையில் துருக்கியில் கட்டுமான பணியில் ஊழல் செய்ததாக சுமார் 600க்கும் மேற்பட்ட கட்டுமான அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey earthquake Corruption in construction work 184 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->