துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த அரசு பள்ளி மாணவர்கள்.!
Turkey earthquake tamilnadu Govt school students help
துருக்கியில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதன்படி அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 1.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 84 ஆண்டுகளில் மோசமான பேரிடராக கருதப்படுகிறது.
இந்த நிலையில் துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களிடம் திரப்பட்ட ரூ.10,050 நிதியை மாவட்ட ஆட்சியரிடம் அரசு பள்ளி மாணவர்கள் வழங்கியுள்ளனர்.
English Summary
Turkey earthquake tamilnadu Govt school students help