இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் சந்தேக நபர் கைது - துருக்கி உள்துறை அமைச்சர் - Seithipunal
Seithipunal


துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பரபரப்பான கடை வீதியான இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை குண்டுவெடுப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பரபரப்பான வீதியில் ஏராளமான உணவகங்கள் மற்றும் பல கடைகள் உள்ளன.

மேலும் வார இறுதி நாள் என்பதால் ஏராளமானோர் கடைவீதியில் திரண்டு இருந்த நிலையில், இந்த பயங்கர குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு முன்பு இங்கு 2015 மற்றும் 2017ல் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. 

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதுகுறித்து துருக்கி உள்துறை அமைச்சர் சுலேமான் சொய்லு, குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை குர்திஸ்தான் போராளிகள் நடத்தி உள்ளனர் என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பெண் ஒருவர் ஈடுபட்டு இருக்க கூடும் என்று துணை அதிபரும், இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என்று துருக்கி அதிபரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா, கிரீஸ், எகிப்து, உக்ரைன், பிரிட்டன், அஜர்பைஜான், இத்தாலி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey interior minister says Suspect arrested in Istanbul bombing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->