ஸ்வீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு துருக்கி ஒப்புதல் அளிக்காது! அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன்.! - Seithipunal
Seithipunal


ஸ்வீடன், பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு துருக்கி ஒப்புதல் அளிக்காது என்று அந்நாட்டு அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதற்கு உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய விரும்பியது ஒரு காரணமாக கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான ஸ்வீடன் பின்லாந்து நேட்டோ அமைப்பில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக ஸ்வீடன் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கருத்தை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேட்டோ அமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது . குர்திஷ் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதில் இருநாடுகளும் மெத்தனம் காட்டி வருவதால் இவற்றை நேட்டோவில் அனுமதிக்கக்கூடாது என்றும், இருநாடுகளும் நேட்டோவில் இணைவதற்கு துருக்கி ஒப்புதல் அளிக்காது என்று அந்நாட்டின் அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey wont support if Finland swedan joins NATO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->