பிலிப்பைன்ஸில் பயிற்சி விமானம் விபத்து - 2 விமானப்படை விமானிகள் பலி
Two air force pilots killed after trainer plane crashes in Phillipines
பிலிப்பைன்ஸில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானப்படை விமானிகள் உயிரிழந்தனர்.
பிலிப்பைன்ஸ் விமானப்படைக்கு சொந்தமான மார்செட்டி எஸ்.எப். 260 ரக பயிற்சி விமானம் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு முன்னதாக கேவிட் மாகாணத்தின் சாங்லி பாயிண்டிலிருந்து இரண்டு விமானிகளுடன் புறப்பட்டு சென்றது.
அப்பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் மணிலாவிற்கு மேற்கே 133 கிமீ தொலைவில் உள்ள பாடான் மாகாணத்தின் பிலார் நகரில் உள்ள விவசாய நிலத்தில் காலை 10.35 மணியளவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு விமானப்படை விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.
இதில் இரண்டு விமானிகளையும் கேப்டன் இயன் ஜெரு பாலோ மற்றும் கேப்டன் ஜான் பாலோ அவிசோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Two air force pilots killed after trainer plane crashes in Phillipines