இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடி சூட்டும் விழா.! 2000 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு.!!
two thousand celebrities ivite for coronation of england king charles
இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடி சூட்டும் விழா.! 2000 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு.!!
கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் விண்ணுலகுச் சென்றார். அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறினார்.
இந்த நிலையில் மன்னர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழா அடுத்த மாதம் 6-ந்தேதி வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் உள்ள அபேதேவாலயத்தில் கோலாகலமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முடிசூட்டு விழாவின் போது மன்னர் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் மற்றும் தடி உள்ளிட்டவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார்.
அதன் பின்னர் மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தி ஆசிர்வதிக்கப்பட்ட புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் சார்லசுக்கு சூட்டப்படும். இதையடுத்து பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் இருந்து மன்னர் சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
அதே சமயம் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார். மன்னரின் முடி சூட்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள சுமார் 2000 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பட உள்ளன.
English Summary
two thousand celebrities ivite for coronation of england king charles