ஊழல் குற்றச்சாட்டு: தேசிய பாதுகாப்பு படை துணை தளபதியை பணி நீக்கம் செய்தார் உக்ரைன் அதிபர்..!
Ukraine president dismissed deputy commander for corruption
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, ரஷ்யா உக்ரைன் நகரங்களின் மீது பல்முனை தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர், பல்வேறு துறைகளில் ஊழல் தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் உறுப்பினராவதற்கு ஊழலை முதலில் ஒழிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதையடுத்து ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் எடுத்து வருவதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ஊழல் குற்றச்சாட்டிற்காக தேசிய பாதுகாப்பு படை துணை தளபதி ருஸ்லான் டிஜூபா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,
ஊழலற்ற பாதுகாப்பு அமைச்சகம் தேவை எனவும், ஊழல் முயற்சிகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றும் படி போலீசார் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஊழலுக்கு எதிராக பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயமாக்கும் முயற்சிகளும் செய்யப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார்.
English Summary
Ukraine president dismissed deputy commander for corruption