ரஷ்ய தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் சுதந்திர தினத்தன்று விழிப்புடன் இருக்க வேண்டும் - உக்ரைன் அதிபர் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையான போர் கிட்டத்தட்ட 6 மாதங்களாக நடந்து வரும் நிலையில் ஜாபோரிஜியா அணுமின் இணையத்தை சுற்றி நடந்த வெடிகுண்டு தாக்குதல், பிவ்டெனுக்ரைன்ஸ்க் அணுமின் நிலையத்தில் நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றால் அணு விபத்து ஏற்படலாம் என்று உக்ரைன் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் 24ம் தேதி அன்று உக்ரைன் சுதந்திர தினம் வருவதையொட்டி, சுதந்திர தினத்திற்கு முன்னதாக ரஷ்யா கொடூர தாக்குதல் நடக்கலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த வாரம் ரஷ்யா தீய செயலைச் செய்ய முயற்சி செய்யலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுதந்திர தினத்தன்று உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலுக்கு பெலாரஸ் தயாராகி வரும் நிலையில், பெலாரஸ், கருங்கடல் மற்றும் ரஷ்யாவிலிருந்து ஒரே நேரத்தில் மூன்று பக்கங்களிலிருந்தும் உக்ரைனை தாக்க முடியும் என்பதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று உக்ரைன் ஆயுதப் படைகளின் ரிசர்வ் கர்னல் மற்றும் ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine President warns people for threat of Russian attack on independence day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->