ஸ்பெயினில் சிறப்பு பயிற்சி பெறும்.. உக்ரைன் ராணுவ வீரர்கள்..! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 13 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நவீன டேங்குகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன. மேலும் ஐரோப்பிய நாடுகள் வழங்கும் நவீன ஆயுதங்களை கையாள்வதற்கு போலந்து, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகள் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சியளித்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்கவும், நவீன போர் கருவிகளை பயன்படுத்தும் முறைபற்றி அறியவும், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஸ்பெயினில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 4 வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் 40 உக்ரைன் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பயிற்சியில் லியோபேர்ட் 244 வகை டேங்குகளை பயன்படுத்தும் முறை மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் டேங்குகளை கொண்டு செல்லும் விதம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போரினிடையே உடனடியாக எவ்வாறு பாலம் அமைப்பது, அகழி தோண்டுதல் மற்றும் தடுப்பு வேலி அமைப்புகள் அமைப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine soldiers receive special training in Spain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->