விரைவில் சீனா அதிபரை சந்திக்கும் உக்ரைன் அதிபர்.!! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் போரை பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர சீனா 12 அம்ச அமைதி திட்டத்தை நேற்று வெளியிட்டது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து கீவ் மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு சீனா வெளியிட்டுள்ள 12 அம்ச அமைதி திட்டத்தை வரவேற்பதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இது உலக பாதுகாப்புக்கு முக்கியமானது என்றும், ரஷ்யாவின் நட்பு நாடான சீனா, ரஷ்யாவிற்கு எந்த வகையிலும் ஆயுதங்களை வழங்காது என்று நான் உண்மையில் நம்ப விரும்புகிறேன் என்றார். மேலும் உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வரை சீனா பரிந்துரைத்த ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு திரும்ப முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukrainian President Plans to Meet Chinese President Xi Jinping


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->