தன்னார்வ ஊழியர்கள் கைது; ஏமனில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ஐ.நா. அறிவிப்பு..!
UN announces that it will suspend operations in Yemen
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதாக ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இப்போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாஸு க்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
அத்துடன், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது டிரோன், ஏவுகணை தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். இதனை அடுத்து, ஏமனில் தங்கள் கட்டுப்பாடில் உள்ள பகுதியில் செயல்பட்டு வந்த ஐ.நா. அமைப்பின் ஊழியர்களையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதோடு, தன்னார்வு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தங்கள் அமைப்பின் ஊழியர்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்துள்ளதால். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
UN announces that it will suspend operations in Yemen