கச்சா எண்ணெய் நிறுவனங்களின் பேராசையால் ஏழை மக்கள் பாதிப்பு.! லாபத்திற்கு அதிக வரி போட அரசுக்கு ஐநா கோரிக்கை - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் பன்னாட்டு சந்தைகளில் பணத்தின் மதிப்பு சரிந்ததையொட்டி கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் எக்ஸோ மூவல், செப்ரான், ஷெல், டோட்டல் போன்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் லாபம் ஓராண்டில் இரட்டிப்பாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போதுள்ள நெருக்கடியான உலக சூழலை பயன்படுத்தி எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களின் விலையை நியாயமற்ற வகையில் உயர்த்துவதாகவும், நிறுவனங்களின் பேராசையால் உலகெங்கும் ஏழை மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் சம்பாதிக்கும் அதீத லாபங்கள் மீது அரசுகள் கடுமையாக வரி விதிக்க வேண்டும் என்று ஆன்டனியோ குட்டரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UN asked govt to put more tax on oil companies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->