பாகிஸ்தானுக்கு மனிதநேய அடிப்படையில் வெள்ள நிவாரண நிதியாக ரூ.459.56 கோடி ஒதுக்கிய அமெரிக்கா.! - Seithipunal
Seithipunal


பருவநிலை மாறுபாடு மற்றும் சராசரியை விட அதிகமாக பெய்த பருவமழை காரணமாக பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ளன.

இதில் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 32 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 1400க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர்.

மேலும் தேங்கி நிற்கும் மழை நீரால் 1.34 லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியாவாலும், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்திற்குப் பின்பு பாகிஸ்தானின் நிலவும் பொருளாதார நிலைமையை சரிசெய்ய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கனை வாஷிங்டனில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தைக்கு பின் அமெரிக்கா வெள்ள நிவாரணம் மற்றும் மனிதநேய அடிப்படையில் இந்த ஆண்டிற்கான நிதி உதவியாக பாகிஸ்தானுக்கு 459.56 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

மேலும் பாகிஸ்தானுக்கு உணவு பாதுகாப்பு உதவி தொகையாக 81.34 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US allocated 459 crore to Pakistan for flood relief


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->