பிரதமர் மோடியின் தயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


நேற்று இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில் இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார். 99 வயதுடைய இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆமதாபாத்தில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பிரதமர் மோடி, உடனடியாக குஜராத்திற்கு சென்று தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் மோடியின் தாயாருக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, மோடியின் தாயார் உடல் காந்திநகரில் உள்ள மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது.

அவருடைய மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என்று அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டர் வழியாக இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு ஜில்லும், நானும் ஆழ்ந்த மற்றும்  உணர்வு சார்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த கடினமான சூழலில் பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

us president condoles to prime minister modi mother died


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->