உக்ரைனின் மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைப்பது நில அபகரிப்பு நடவடிக்கை - அமெரிக்கா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகணங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.

இதையடுத்து இந்த நான்கு மாகாணங்களையும் ரஷ்யவுடன் இணைப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தெற்கு உக்ரைன் பகுதிகளான ஜபோரிஜியா மற்றும் கெர்சன் மாகணங்களை சுதந்திர பிரதேசமாக அங்கீகரிக்கும் ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டார்.

இதையடுத்து உக்ரைனின் 4 மாகணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெற உள்ளது. இதற்காக நான்கு மாகாணங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யா, உக்ரைனில் கைப்பற்றிய மாகாணங்களை அதிகாரபூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளதை நில அபகரிப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க உள்துறை செயலாளர் ஆனடனி பிளிங்கன் கூறுகையில், சர்வதேச சட்டங்களின் படி ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், உக்ரைனில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய 4 மாகாணங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்வதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US says it is illegal to annexe ukraine provinces to russia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->