சுத்தியால் தாக்கப்பட்ட அமெரிக்கா சபாநாயகரின் கணவர்... அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். இதனால் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நான்சி பெலோசியின் வீட்டுக்குள் கடந்த 28 ஆம் தேதி காலை காலை அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

 இதையடுத்து காயமடைந்த பால் பெலோசி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

மேலும் பெலோசியின் சான் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்து சபாநாயகரின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கியதாக 42 வயதான டேவிட் டிபேப் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அந்த நபர் மீது தாக்குதல் மற்றும் கடத்தல் முயற்சி வழக்குகள் பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US Speakers husband returned home after surgery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->