சூடானில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால்.... "பொருளாதார தடை" விதிக்கப்படும் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக கடும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. போரால் இதுவரை சூடானில் வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் 5000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தங்களது தாயகம் திரும்பியுள்ளனர்.

இதனிடையே அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் மேற்கொண்ட முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இச்சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சூடானில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டால் ராணுவ மற்றும் துணை ராணுவ படைகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சூடானில் அர்த்தமற்ற முறையில் நடந்து வரும் போரால் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் சூடானில் போர் நிறுத்த ஒப்பந்தம் சீர்குலையாமல் இருப்பது ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளின் முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US warns of Economic sanctions of cease fire violated in sudan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->