அமெரிக்கா | பிரபல பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் மரணம்!
USA Shooting famous university 3 people died
அமெரிக்கா லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகத்தில் நேற்று காலை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினார்.
போலீசார், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் படி வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் அருகில் உள்ள விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் அருகில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சூதாட்ட மைதானம் உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இதே பகுதியில் மிகப்பெரிய அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் 60 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
USA Shooting famous university 3 people died