தரையிறங்கிய பிறகு விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தரையிறங்கிய பிறகு விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்.!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் கடந்த ஜூன் மாதம் சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 

இந்த விண்கலத்திலிருந்து பிரிந்த "விக்ரம் லேண்டர்" இன்று மாலை 6:04 மணி அளவில் நிலவில் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. 

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட இந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட்ட உடன் எடுக்கப்பட்ட முதல் படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை இஸ்ரோ தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தப் படம் லேண்டிங் இமேஜர் கேமராவால் படம் பிடிக்கப்பட்டது. இது சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. 

மேலும் ஒரு கால் மற்றும் அதனுடன் இணைந்த நிழல் உள்ளது. சந்திரயான்-3 சந்திர மேற்பரப்பில் ஒப்பீட்டளவில் தட்டையான பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikram lendar take first photo in moon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->