உலகக்கோப்பை கால்பந்து போட்டி தோல்வியால் பெல்ஜியத்தில் வன்முறை வெடித்தது! - Seithipunal
Seithipunal


கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் குரூப் எப் பிரிவில் இடம் பெற்ற பெல்ஜியம் மற்றும் மொராக்கோ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் பாதி நேர ஆட்டம் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்ட முடிவில் மொராக்கோ அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் மொராக்கோ அணி நான்கு புள்ளிகள் உடன் முதலிடத்திலும் பெல்ஜியம் மூன்று புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்த போட்டியின் முடிவு வெளியானவுடன் பெல்ஜியம் நாட்டின் பிராஸ்ஸல்ஸில் நகரில் கால்பந்தாட்ட ரசிகர்களால் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் கார் மற்றும் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நடுரோட்டில் கால்பந்தாட்ட ரசிகர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த கலவர சம்பவம் காரணமாக பெல்ஜியம் தலைநகர் முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது. பெல்ஜியம் கால்பந்தாட்ட ரசிகர்களால் ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் காயமடைந்தார். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இரவு முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Violence broke out in Belgium due to football match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->