டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு; DOGE துறை தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரத்திலேயே DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி  பதவி விலகியுள்ளார்.   

அமெரிக்காவின் அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக டொனால்ட் ட்ரம்பினால் DODGE துறை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர்களாக உலக பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித் இருவரும் கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக அதிக நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் தீவிரமாக செயற்பட்டனர்.

எலான் மஸ்க்மற்றும் விவேக் ராமசாமியின் தீவிர ஆதரவை அங்கீகரிக்கும் வகையில், ட்ரம்ப் DODGE துறையை உருவாக்கி இருவரையும் தலைவர்களாக நியமித்திருந்தார். 

ஆனால், தற்போது விவேக் ராமசாமி பதவி விலகுவதாக அறிவித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

குறித்த பதிவில், DOGE துறையை உருவாக்க உதவும் வாய்ப்பு, எனக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் மற்றும் குழுவினர்  வெற்றிபெறுவர் என நான் நம்புகிறேன்.

மேலும், ஓஹியோவை சார்ந்த எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் அறிவிப்பேன். குறிப்பாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற ஜனாதிபதி, ட்ரம்பிற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார். 

விவேக் ராமசாமியின், இந்த திடீர் தீர்மானம் குறித்து பல கேள்விகள் எழும் நிலையில், அதன் பின்னணி தொடர்பிலும் பல விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றமமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vivek Ramasamy resigns as DOGE department head


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->