ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை - மக்களின் நிலை என்ன?
Volcano explossion in island
உலகின் பதினெட்டாவது பெரிய தீவான ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை கடந்த ஒருவாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
![](https://img.seithipunal.com/media/erimalai-eg379.png)
இதன் காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசரமாக வெளியேற்றப்பட்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
ஏற்கனவே ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதன் காரணமாக எரிமலையை சுற்றியுள்ள நகரங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.
English Summary
Volcano explossion in island